UPDATED : செப் 18, 2026 03:47 PM
ADDED : செப் 18, 2026 03:48 PM
கோவை:
வேளாண் பல்கலையின் திட்டமிடல், கண்காணிப்பு இயக்ககத்தில் வேளாண் இணைப் பேராசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியை துவக்கி வைத்த வேளாண் பல்கலை செயல் துணைவேந்தர் ரவீந்திரன் பேசுகையில், “மாணவர்களின் கல்வி வளர்ச்சி, நற்பண்புகள், திறன்கள் மற்றும் எதிர்காலத் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் நவீன கற்றல் அணுகுமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். மாணவர்களைத் தயார்படுத்த தேவையான நவீன கற்பித்தல் நுட்பங்கள், அணுகுமுறைகளை பேராசிரியர்களுக்கு வழங்க இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பல்கலை தனி அலுவலர் சீனிவாசன், பேராசிரியர்கள் உமேஷ் கண்ணா, சம்சாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
