UPDATED : செப் 19, 2026 09:27 PM
ADDED : செப் 19, 2026 09:28 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பயிற்சி நடந்தது.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஐ.சி.டி., அகாடமி சார்பில் சைபர் செக்யூரிட்டி தலைப்பில் ஒரு வார கால ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பயிற்றுனர் யாசின் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். பல்வேறு தொழில்நுட்ப கல்லுாரிகளைச் சேர்ந்த 25 விரிவுரையாளர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் சிவகங்கா நன்றி கூறினார்.
