தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திறன் பயிற்சி

செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திறன் பயிற்சி

செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திறன் பயிற்சி


UPDATED : ஆக 04, 2026 01:12 PM

ADDED : ஆக 04, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 01:12 PM ADDED : ஆக 04, 2026 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாடு கழகத்தின் பழங்கள் மற்றும் காய்கறிகளின் முதல்நிலை பதப்படுத்துதல் சேமிப்பு மற்றும் சிப்பமிடுதல் குறித்த இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உணவு பதன்செய் பொறியியல் துறை சார்பில் நடந்தது.

செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் பாபு தலைமையேற்று தொடங்கி வைத்தார். உணவு பதம்செய் பொறியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் பயிற்சி ஏற்பாடுகளை செய்தார். பதம்செய் துறை பேராசிரியர் ராமலட்சுமி பயிற்சி குறித்து பேசினார்.

உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியர் கமல சுந்தரி பழங்கள் மற்றும் காய்கறிகளின் இரண்டாம் நிலை பதப்படுத்துதல் பற்றி பேசினார். பேராசிரியர்கள் அமுதசெல்வி, கீர்த்திவாசன், ராஜா, அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் தொழில் முனைவோர் மட்டும் விவசாய உற்பத்தியாளர் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us