UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 03:43 PM

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஸ்லோவேனியா அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஸ்லோவேனிய நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், குறுகிய கால பயிற்சி பெற விரும்புவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
படிப்புகள்:
முதுநிலை அல்லது ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக, ஸ்லோவேனிய கல்வி நிறுவனத்திற்கு குறுகிய கால 'விசிட்' மேற்கொள்ளலாம்.
உதவித்தொகை காலம்:
3 முதல் 10 மாதங்கள் வரை.
வயது வரம்பு:
உதவித்தொகை காலம் முடிவதற்குள் 26 வயது பூர்த்தியாகக்கூடாது. இந்த விதி ஆராய்ச்சி மாணவர்களுக்கு 30 வயதாக உள்ளது.
சலுகைகள்:
கல்வி பெறும் காலம்வரை மாதம் ரூ.38 ஆயிரம் உதவித்தொகை. இலவச தங்குமிடம். மருத்துவ காப்பீடு மற்றும் குறைந்த கட்டணத்தில் உணவு.
மொத்த உதவித்தொகை எண்ணிக்கை:
24
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர் விருப்பப்படி, பல்கலைக்கழகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு தொடர்புடைய துறையிலிருந்து ஒரு ஏற்பு கடிதத்தைக் கோர வேண்டும். இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: முழுமையான படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படாது. அதேபோல், ஸ்லோவேனிய மொழிப் பாடத்திற்கும் உதவித்தொகை வழங்கப்படாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 30
விபரங்களுக்கு:
https://studyinslovenia.si/study/exchange-programmes/

