UPDATED : ஜூலை 07, 2026 06:06 PM
ADDED : ஜூலை 07, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
சீரநாயக்கன்பாளையம்:
சீரநாயக்கன்பாளையம், சா.பூ.வீ., அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசின் டாப்ஸ் திட்டத்தின் கீழ், அறிவுசார் கணினி வகுப்பு அறை திறக்கப்பட்டது.
கரும்பு இனப்பெருக்க நிறுவன உதவியுடன் சீரமைக்கப்பட்ட கணினி வகுப்பறையை, நிறுவனத்தின் இயக்குனர் கோவிந்தராஜ் திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட அவர், மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை கற்க ஊக்குவித்தார்.
வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டு, நவீன கணினிகள், புராஜக்டர், பேட்டரிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர் அழகேசன் தெரிவித்தார்.
நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கண்ணன், அருண்குமார், ஆறுமுகம், ரமேஷ், செல்வமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
