sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்மார்ட் உபகரணம்: அரசு பள்ளிக்கு உதவி

ஸ்மார்ட் உபகரணம்: அரசு பள்ளிக்கு உதவி

ஸ்மார்ட் உபகரணம்: அரசு பள்ளிக்கு உதவி


UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM

ADDED : ஜூலை 09, 2024 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM ADDED : ஜூலை 09, 2024 09:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மெட்ரோ டைனமிக்ஸ் ரோட்டரி சங்கம், இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நவீன உபகரணங்களை பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த, 1.80 லட்சம் ரூபாய் மதிப்பு 'ஸ்மார்ட் டிவி' வழங்கியது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் இஷிதா பன்சாலி முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க கிராமப்புற பணிகளின் தலைவர் சேதுராமன் வரவேற்றார்.

தலைமை ஆசிரியை மஞ்சுளா, பள்ளி மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விளக்கினார். சங்கத்தின் துணை ஆளுநர் கமல் குமார், சங்கத்தின் செயலாளர் வித்யா நடராஜன் ஆகியோர் ஸ்மார்ட் டிவியை பள்ளிக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் நித்யா ராஜகோபால், குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி, துடியலூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறார் இலக்கியவாதி சரிதா ஜோ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்கு கதைகளை சொல்லியதோடு, தான் எழுதிய புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். ஆசிரியர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us