UPDATED : அக் 31, 2026 02:12 PM
ADDED : அக் 31, 2026 02:13 PM
கோவை:
டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில், 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிலான ஐ.சி.இ.டி.ஐ.எஸ்.டி., '26 கருத்தரங்கம் நடந்தது.
எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடந்த இக்கருத்தரங்கில் தென் ஆப்ரிக்கா, மொரீஷியஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் சிறப்புரையாற்றினர்.
இருநாள் கருத்தரங்கில் பல துறைகளைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள் தலைமையில் ஆய்வு அமர்வுகள் நடத்தப்பட்டன. 246 ஆய்வாளர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 9 ஆய்வுக் கட்டுரைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
