sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆவடி கிளை நுாலகத்திற்கு இடம் தேர்வு 30 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு

/

ஆவடி கிளை நுாலகத்திற்கு இடம் தேர்வு 30 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு

ஆவடி கிளை நுாலகத்திற்கு இடம் தேர்வு 30 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு

ஆவடி கிளை நுாலகத்திற்கு இடம் தேர்வு 30 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு


UPDATED : ஜன 08, 2025 12:00 AM

ADDED : ஜன 08, 2025 08:58 AM

Google News

UPDATED : ஜன 08, 2025 12:00 AM ADDED : ஜன 08, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:
ஆவடி, சின்னம்மன் கோவில், காந்தி சிலை அருகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ஆவடி கிளை நுாலகம் இயங்கி வந்தது.

பாழடைந்த தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த அந்த நுாலகத்தில், 2,500 உறுப்பினர்கள், 15,000 புத்தகங்கள் இருந்தன. தினமும் 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

மழை காலத்தில் நுாலகத்தினுள் நீர் கசிந்து புத்தகங்கள் பாழாகி, வாசகர்கள் உட்கார முடியாமல் அவதி அடைந்தனர்.

கடந்த 1987ல், ஆவடி நகரியத்தில், நுாலகத்திற்கு புது கட்டடம் அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த 29 ஆண்டாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் இயங்கி வந்தது.

அந்த கட்டடமும் 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், பாழடைந்த நிலையில் காட்சி அளித்தது. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, செப்., 30 ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட கிளை நுாலகத்தில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து, நவ., 6ம் தேதி நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, கடந்த 30 ஆண்டுகளாக இட வசதி இல்லாமல் அவதி அடைந்த ஆவடி கிளை நுாலகத்தை, இடமாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகம், ஆவடி மாநகராட்சியுடன் பேச்சில் ஈடுபட்டது.

இதைத்தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி சார்பில் பருத்திப்பட்டு, பசுமை பூங்காவில் ஏற்கனவே இருந்த கட்டடம் சீரமைக்கப்பட்டு, நுாலகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், மாநகராட்சி சார்பில், ஆவடி, பாலேரிப்பட்டு பகுதியில் நுாலகத்திற்கு 5 சென்ட் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மழையில் நனைந்த 2,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உலர்த்தும் பணி நடந்து வருகிறது. அலமாரியில் புத்தகம் அடுக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் முடிந்து விடும். அதன்பின், நுாலகம் முழுமையாக செயல்பட துவங்கும். தற்போது, நாளிதழ் மற்றும் வார இதழ்கள் மட்டும் படிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட கட்டடத்தின் தரை தளத்தில், பொதுமக்கள் வந்து படிப்பதற்கும், முதல் தளத்தில், மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயில இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரணிதரன், சமூக ஆர்வலர்: நுாலகத்தை பாழடைந்த கட்டடத்தில் இருந்து, எதிரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிகமாக இடமாற்றம் செய்திருக்கலாம். அதேபோல், வீட்டு வசதி வாரியம் மற்றும் பருத்திப்பட்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 8.5 சென்ட் நிலத்தில், நுாலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டினால், வார்டு 40, 41 மற்றும் சுற்றுவட்டார பகுதிவாசிகள் பயனடைவர்.

கவிதா, மாவட்ட நுாலகர், திருவள்ளூர்: பூங்காவில், தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். எனவே, பூங்காவிற்கு வருவோர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிவாசிகள் மற்றும் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்கள், அதிக அளவில் பயன் பெறுவர் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், பட்டாபிராம் நுாலகமும், விரைவில் நிரந்தர கட்டடத்திற்கு இடம் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






      Dinamalar
      Follow us