தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ குழந்தைகளின் மனநல பிரச்னைகளுக்கு தீர்வு: இலவச ஆலோசனை முகாம்

குழந்தைகளின் மனநல பிரச்னைகளுக்கு தீர்வு: இலவச ஆலோசனை முகாம்

குழந்தைகளின் மனநல பிரச்னைகளுக்கு தீர்வு: இலவச ஆலோசனை முகாம்


UPDATED : மே 28, 2024 12:00 AM

ADDED : மே 28, 2024 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2024 12:00 AM ADDED : மே 28, 2024 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்த இலவச ஆலோசனை முகாம், கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கே.எம்.சி.எச்.,ல் நடக்கிறது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை குழந்தைகள் மனநல மருத்துவர் நிவேதிதா செல்வகுமார் கூறியதாவது:

கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இதில், இருதயம், நரம்பு, எலும்பு, உளவியல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான அனைத்து பாதிப்புக்கும், அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம், தற்போது நடந்து வருகிறது. வரும் 31ம் தேதி வரை தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை இம்முகாம் நடக்கிறது.

ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு, மன அழுத்தம், மனசோர்வு, பதற்றம் மனசிதைவு நோய், அதீத கோபம், எதிர்த்து பேசுதல், தீய பழக்கத்துக்கு அடிமையாதல், வீடியோ கேம், இன்டர்நெட் மற்றும் செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாதல் மற்றும் துாக்கம் சார்ந்த பிரச்னைகளால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

இத்துடன், மனரீதியாக அல்லது உடல் ரீதியாக குழந்தையின் வளர்ச்சியில் தாமதம், வலிப்பு நோய், தலைவலி, பக்கவாதம், தசைநார் சிதைவு நோய், பேச்சில் தாமதம், மூளை நரம்பியல் சார்ந்த பிறவிக்குறைபாடுகள், பெருமூளை வாதம் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கும், சுவாசிப்பதில் சிரமம், தோல் நீல நிறமாக மாறுவது, விளையாடும்போது சோர்வு ஏற்படுவது உள்ளிட்ட இருதயம் சார்ந்த பாதிப்புகளுக்கும், முகாமில் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர்.

இலவச மருத்துவ ஆலோசனையுடன், பரிசோதனை மற்றும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us