UPDATED : ஆக 11, 2026 04:47 PM
ADDED : ஆக 11, 2026 04:48 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசாரின் பிள்ளைகளுக்கு கல்லுாரி கல்விக்கான ஊக்கத் தொககையை எஸ்.பி., வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் பிள்ளைகளுக்கு கல்லுாரிக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி., ஷஹ்னாஸ் தலைமை தாங்கி, போலீஸ்காரர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் 17 பேரின் பிள்ளைகளுக்கு கல்லுாரி படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கி, படிப்பில் கவனம் செலுத்தில சிறந்து விளங்க வேண்டும் என ஊக்கத் தொகை பெற்றவர்களுக்கு அறிவுறுத்தினார்.
