தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் விண்வெளி கண்காட்சி துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் விண்வெளி கண்காட்சி துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் விண்வெளி கண்காட்சி துவக்கம்


UPDATED : அக் 06, 2026 01:11 PM

ADDED : அக் 06, 2026 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:11 PM ADDED : அக் 06, 2026 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குனியமுத்தூர்:
கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், விண்வெளி கண்காட்சி நேற்று துவங்கியது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), மகேந்திரகிரி இஸ்ரோ புரொபல்ஷன் வளாகம் சார்பில், மூன்று நாள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

விழாவுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தார். இஸ்ரோ புரொபல்ஷன் வளாக துணை இயக்குனர் முருகன் வரவேற்றார். வளாக குழு தலைவர் கவுதமன் விண்வெளி வாரம் குறித்து விளக்கினார்.

திருவனந்தபுரம் இஸ்ரோ லிக்குய்ட் புரொபல்ஷன் அமைப்புகள் மைய முன்னாள் இயக்குனர் ஹட்டன் பேசுகையில், “விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்ப திறன்கள், ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குனர் நாராயணன் அப்பு கூறுகையில், “பாரம்பரியமாக ராக்கெட் தயாரிப்பு, ஏவுதல் நடவடிக்கைகள் அரசு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது தனியார் நிறுவனங்களும் இத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துறையில் இந்தியா முக்கிய சக்தியாக உருவாகியுள்ளது. 2028க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை இஸ்ரோ செய்து வருகிறது” என்றார்.

கோவை கலெக்டர் பவன்குமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், இஸ்ரோ விஞ்ஞானிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செயற்கைகோள், ராக்கெட்களின் மாதிரிகளை பார்வையிட்டு, தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர். கண்காட்சி நாளை நிறைவடைகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us