தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.ஜி., கல்லுாரியில் சிறப்பு கலந்துரையாடல்

பி.எஸ்.ஜி., கல்லுாரியில் சிறப்பு கலந்துரையாடல்

பி.எஸ்.ஜி., கல்லுாரியில் சிறப்பு கலந்துரையாடல்


UPDATED : செப் 08, 2026 07:28 PM

ADDED : செப் 08, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 07:28 PM ADDED : செப் 08, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பேராசிரியர் சுதீர் ஜெயின், இரண்டு சிறப்பு கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.

காலையில், 'ஆசிரியர்களை உருவாக்குதல், நிறுவனங்களை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நடந்தது. இதில் ஆசிரியர் மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் கல்வித் தலைமைத்துவம் குறித்து கருத்துகள் பகிரப்பட்டன.

மாலையில், 'உங்கள் கல்லூரி வாழ்க்கையை சிறப்பாக பயன்படுத்துதல், ஓர் உரையாடல்' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில் உயர்கல்வி மற்றும் நிறுவனத் தலைமைத்துவம் தொடர்பான சுதீர் ஜெயினின் அனுபவங்களை மாணவர்கள் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திலகவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us