UPDATED : செப் 16, 2026 07:29 PM
ADDED : செப் 16, 2026 07:30 PM
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதார துறை சார்பில், சிறப்பு கல்வி மற்றும் ஆரம்பகால தலையீட்டு சேவைகள் வழங்க நடமாடும் மையம் நேற்று துவக்கப்பட்டது.
ராஷ்டிரிய பால ஸ்வஸ்த்ய கார்யக்ரம் திட்டதின் கீழ், நடமாடும் மாவட்ட ஆரம்ப தலையீட்டு மைய வாகனம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேள், ராஜிவ்காந்தி மகளிர் மருத்துமனை, மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன், இணை இயக்குனர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அருள்விசாகன், மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், ஒருங்கிணைப்பு அலுவலர் சரவணன், சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் மையம் மூலம், சிகிச்சை மற்றும் சிறப்பு பயிற்சி தேவைபடும் குழந்தைகளுக்கு ஆரம்பகால தலையீட்டு மற்றும் சிகிச்சை சேவைகளை சத்யா சிறப்பு பள்ளி ஒத்துழைப்புடன் சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி மற்றும் பிற ஆரம்ப கால தலையீட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
