தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம்; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம்; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம்; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்


UPDATED : ஆக 12, 2026 09:07 PM

ADDED : ஆக 12, 2026 09:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 09:07 PM ADDED : ஆக 12, 2026 09:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீட் தேர்வுக்கு எதிராக அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சட்டசபையில் அவர் கூறியதாவது:

தமிழக அரசு மேற்கொண்ட விரிவான ஆய்வு மூலம் தெரிய வருவது, நீட் தேர்வு என்பது சமூக ஏற்ற தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கிறது என்பது தான்.

சம வாய்ப்பை குறைக்கும் எந்த தேர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திலும் +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

சமூக நீதி எதிர்காலத்தை பற்றிய தீர்மானம். சுகாதார கட்டமைப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நீட் தேர்வால் அடிப்படை சமநிலை சீர்குலைந்துள்ளது. 12 ஆண்டு கல்வியை ஒரு நாள் நீட் தேர்வு தீர்மானிக்க கூடாது. பொருளாதாரத்தில் வசதியாக உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது.

இவ்வாறு அருண்ராஜ் பேசினார்.

வெளிநடப்பு


சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா,ஜ., எம்.எல்.ஏ., போஜராஜன் வெளிநடப்பு செய்தார். அதே நேரத்தில் பா.ம.க., அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளன.

பா.ஜ.,வை மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிராக அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு தீர்மானம்


வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் எப்.சி.ஆர்.ஏ., சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us