UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM
ADDED : ஜூலை 11, 2024 09:43 AM
தெலுங்கானாவில் உள்ள ஜஹீராபாத்தைச் சேர்ந்த 21 வயதான கொட்டகப்பு ஷிவானி என்பவர் சமீபத்தில், மதிப்புமிக்க 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமா படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளார்.
நூற்றக்கணக்கான மாணவிகள் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறுகையில், ஷிவானி சேர்க்கை பெற்றதில் என்ன சிறப்பு என்றே தோன்றும். ஆம், ஷிவானி சிறப்பு திறன் பெற்றவர் தான். 100 சதவீத பார்வைக் குறைபாடுள்ள அவர், நாட்டின் போட்டிகள் நிறைந்த, கடினமான தேர்வுகளில் ஒன்றான 'கேட்'ல் சிறந்த மதிப்பெண் பெற்று, மேலாண்மை கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கும் ஐ.ஐ.எம்.,ல் சேர்க்கை பெற்றுள்ளது சிறப்பு தானே!
ஐ.ஐ.எம்., படிப்பிற்கு பிறகு, கார்ப்பரேட் நிறுவனத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்ற விரும்புவதோடு, போதிய பணி அனுபவத்தைப் பெற்ற பிறகு, ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்று நிர்வாகத்தின் உயர் மட்டத்திற்கு செல்ல விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.