UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM
ADDED : ஜூன் 14, 2025 10:56 AM
 மதுரை:
 மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உலகத்தமிழ் சங்கத்தில் நடந்த செம்மொழி நாள் நிகழ்வில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தன.
பள்ளி பேச்சுப்போட்டியில் நரிமேடு ஜோதி பள்ளி மாணவன் திஷாந்த் ரூ.10ஆயிரம் முதல் பரிசு, அனுப்பானடி சவுராஷ்டிரா பள்ளி காயத்ரி 2ம் பரிசு ரூ.7000, திருமங்கலம் அரசுப் பள்ளி ஜெய்ஸ்ரீ 3ம் பரிசு ரூ.5000 பரிசு வென்றனர். கட்டுரைப் போட்டியில் எழுமலை பாரதியார் பள்ளி அழகுபாண்டி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி ஜனனி 2ம் இடம், தெப்பக்குளம் தியாகராஜர் மாடல் பள்ளி சக்திகணேஷ் 3ம் இடம் வென்றனர்.
கல்லுாரி பேச்சுப்போட்டியில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சுபநிதி சுப்ரமணி முதல் பரிசு, தியாகராஜர் கல்லுாரி கார்த்திகேயன் 2ம் பரிசு, அரசு சட்டக்கல்லுாரி மீனாம்பிகா 3ம் பரிசு வென்றனர்.
கட்டுரைப் போட்டியில் ஸ்ரீமீனாட்சி அரசு கல்லுாரி பிரபாவதி முதல் பரிசு, கோட்டைப்பட்டி பராசக்தி கல்வியியல் கல்லுாரி சிவக்குமார் 2ம் பரிசு, ஸ்ரீமீனாட்சி அரசு கல்லுாரி சுமையா பர்வீன் 3ம் பரிசு வென்றனர். சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் சான்றிதழ் வழங்கினார். துறை துணை இயக்குநர் சுசிலா உடனிருந்தார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

