UPDATED : அக் 22, 2026 05:48 PM
ADDED : அக் 22, 2026 05:49 PM
சிவகாசி:
சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் அறிவியல் மானுடவியல், கட்டடக் கலை, உடற்கல்வித்துறை சார்பில் மெப்கோ ஸ்போர்ட்ஸ் பெஸ்ட், 'ராடிக்ஸ் 26' பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி , கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 1700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர், சீனியர் , சூப்பர் சீனியர் என தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறகுப்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, பேச்சு, கட்டுரை மாதிரி விளக்கம், ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஹெக்சாவேர் மண்டல தலைவர் ஹரி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. கட்டட வடிவமைப்புத் துறை, ஆங்கிலம் , கணிதம், இயற்பியல், வேதியியல், உடற்கல்வி துறைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
