விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 3ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 3ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஏப் 30, 2026 05:29 PM
ADDED : ஏப் 30, 2026 05:31 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதில், நடப்பாண்டிற்கான விளையாட்டில் சிறந்து விளங்குவதோடு ஆர்வமும் உள்ள மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மே 3ம் தேதி, மாலை 06:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதார் அட்டை, பிறப்பு சான்று, விளையாட்டு சான்று, பள்ளியில் பயிலுவதற்கான ஏதேனும் ஆவண நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
நடப்பாண்டிற்கான கல்வியாண்டில் விளையாட்டு விடுதிக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை சேருவதற்கு மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான தேர்வு மே 7ம் தேதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 07:00 மணி முதல் நடைபெறும். மாணவியருக்கு மே 8ம் தேதி காலை 07:00 முதல், நடைபெற உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலவலரை 74017 03481 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
