UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 12:02 PM

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, ராஜூவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளாகங்கள்:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர், சண்டிகர் மற்றும் கவுகாத்தி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களில் இக்கல்வி நிறுவனத்திற்கான வளாகங்கள் செயல்படுகின்றன.
படிப்புகள்:
ஸ்ரீபெரும்புதூர் வளாகம்:
எம்.எஸ்சி., - அப்ளைடு சைக்காலஜி
எம்.ஏ., - இங்கிலீஷ்
எம்.ஏ., - சோசியாலஜி
எம்.ஏ., - சோசியல் வொர்க்
சண்டிகர் வளாகம்:
எம்.ஏ., - பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்
எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rgniyd.gov.in/reg/node/546 எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 31ம் தேதி காலை 10:30 முதல் 12:30 மணிவரை 'மல்ட்டிபிள் சாய்ஸ்' கேள்விகள் அடிப்படையில் நுழைவுத்தேர்வு நடைபெறும். அன்று மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு நேர்முகத்தேர்விற்கு பிறகு உடனடியாக அட்மிஷன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 27
விபரங்களுக்கு:
https://www.rgniyd.gov.in/