தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ., முதன்மை தேர்வில் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் அசத்தல்

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் அசத்தல்

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் அசத்தல்


UPDATED : ஏப் 27, 2026 10:32 AM

ADDED : ஏப் 27, 2026 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 10:32 AM ADDED : ஏப் 27, 2026 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஜே.இ.இ., முதன்மை தேர்வில், ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் இரண்டு பேர், 300க்கு 300 என, முழு மதிப்பெண் பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எனும், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நடப்பு கல்வியாண்டுக்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வில், ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவன மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இக்கல்வி நிறுவன மாணவர்கள் இரண்டு பேர், அகில இந்திய அளவில், பொதுப்பிரிவில் முழு மதிப்பெண் பெற்று, தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் சேகர் ரெட்டி மற்றும் பசலா மோஹித் ஆகியோர், 300க்கு 300 மதிப்பெண் பெற்று, இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் ஆருஷ் சிங்கால் 8வது இடம்; யஷ்வர்தன் 11வது இடம்; மந்தீப் ரெட்டி 15வது இடம் பிடித்துள்ளனர். அதே போல, முதல் 10 இடங்களில், ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், முதல் 100 இடங்கள் மற்றும் 1,000 இடங்களுக்குள் ஏராளமான சைதன்யா மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து, ஸ்ரீ சைதன்யா கல்வி இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுஷ்மா போபண்ணா கூறியதாவது:

ஜே.இ.இ., முதன்மை தேர்வில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, 300க்கு 300 மதிப்பெண் பெறும் சாதனை, ஸ்ரீ சைதன்யாவுக்கே சேரும். தொடர்ந்து நடத்தப்படும் மாதிரி தேர்வுகள், நுணுக்கமான பாடத்திட்ட அட்டவணைகள், சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பு, சிறந்த கற்றல் தளங்கள், இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளன. சிறப்பாக பங்களிப்பை வழங்கிய மாணவர்களை, சைதன்யா பாராட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில், ஸ்ரீ சைதன்யா நிறுவன கல்வி இயக்குநரும், தலைமை செயலர் அதிகாரியுமான சுஷ்மா போபண்ணா, இயக்குநர் சீமா போபண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us