ரோட்டரி செரினிட்டி கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் பள்ளி அபாரம்
ரோட்டரி செரினிட்டி கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் பள்ளி அபாரம்
UPDATED : ஜன 21, 2026 04:37 PM
ADDED : ஜன 21, 2026 04:39 PM
சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான ரோட்டரி செரினிட்டி கோப்பை கிரிக்கெட் போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
பள்ளிகளுக்கு இடையேயான, ரோட்டரி செரினிட்டி கோப்பை யு - 19 கிரிக்கெட் போட்டி, சென்னையில் நேற்று துவங்கியது. போட்டிகள் நகரின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
வேளச்சேரியில் நடந்த ஆட்டத்தில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 330 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய பி.எஸ்.பி.பி., மில்லினியம் அணி, 44.4 ஓவர்களில், 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி யடைந்தது.
ராயப்பேட்டையில் நடந்த ஆட்டத்தில், புதுார் அரசு பள்ளி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 158 ரன்கள் அடித்தது.
அடுத்து விளையாடிய லாலாஜி மெமோரியல் அணி, 30.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 162 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

