6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு போட்டி
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு போட்டி
UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 05, 2025 09:40 AM

சென்னை:
அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தனித்துவமான போட்டி நடைபெறவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கிறது. போட்டி வினாடி-வினா மற்றும் செய்முறை செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பள்ளியில் அஞ்சல்தலை சேகரிப்பு மையம் இருக்க வேண்டும். அத்துடன், மாணவர்கள் அதன் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இம்மையம் இல்லாத பள்ளிகளில், மாணவரின் தனிப்பட்ட அஞ்சல்தலை வைப்பு கணக்கு கருத்தில் கொள்ளப்படும்.
பிராந்தியத் தேர்வு செப்., 20ம் தேதியும், விண்ணப்ப முடிவு ஆகஸ்ட் 25ம் தேதியும் வெளியிடப்படும்.
விண்ணப்ப இணையதளம்:
www.tamilnadupost.cept.gov.in
பிராந்திய அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அஞ்சல்தலை செய்முறை நிகழ்வில் பங்கேற்க வேண்டியிருக்கும். இது, மாணவர்களின் அறிவாற்றலும், சுறுசுறுப்பும் வெளிப்படும் அரிய வாய்ப்பு என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.