தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சொந்த ஊரில் தொழில் துவங்குங்கள் குடகு மக்களுக்கு முதல்வர் கோரிக்கை

சொந்த ஊரில் தொழில் துவங்குங்கள் குடகு மக்களுக்கு முதல்வர் கோரிக்கை

சொந்த ஊரில் தொழில் துவங்குங்கள் குடகு மக்களுக்கு முதல்வர் கோரிக்கை


UPDATED : அக் 05, 2026 03:04 PM

ADDED : அக் 05, 2026 03:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 03:04 PM ADDED : அக் 05, 2026 03:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
“சொந்த ஊரில் தொழில் துவங்கி, தொழில்முனைவோராக மாறுங்கள்,” என, குடகு மக்களுக்கு, முதல்வர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு உல்லாலில் உள்ள, குடகு கவுடா சமாஜ் அரங்கில், அந்த பகுதியின் முக்கியமான, நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

நீங்கள், குடகில் இருந்து பெங்களூரு வந்து வசிக்கிறீர்கள். மரத்திற்கு வேர் எவ்வளவு முக்கியமோ அதுபோல மனிதனுக்கு நம்பிக்கை முக்கியம். கலாசாரம், ஊர், பாரம்பரியம், சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில் நீங்கள் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குடகிற்கு என கலாசாரம், மத வரலாறு உள்ளது.

காவிரி அன்னை, உங்களிடம் இருந்து பிறக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் காவிரி ஆரத்தி நடத்த முடிவு செய்துள்ளேன். தசரா பண்டிகையின் போதும், காவிரி ஆரத்தி நடத்த அறிவுறுத்தி உள்ளேன். குடகு, கர்நாடகாவின் காஷ்மீராக உள்ளது.

மலைப்பகுதியில் வசிக்கும் நீங்கள் இயற்கை வளங்களை பயன்படுத்தி, சொந்த ஊர்களில் தொழில் தொடங்கி தொழில்முனைவோர் ஆக வேண்டும். உங்கள் முயற்சிக்கு நான் வலு சேர்ப்பேன்.

எனது கடினமான காலத்தில் குடகு மக்கள் ஆதரவாக இருந்துள்ளனர். உங்கள் உணர்வுகள், எண்ணங்களை புண்படுத்தாமல் ஆட்சி செய்வேன். நான் உங்கள் வீட்டின் முதல் மகன் நான். குடகு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா எங்களுக்கு இரு கண்கள் போன்றவர்கள். அவர்களுக்கு நீங்கள் அரசியல்ரீதியாக சக்தி கொடுங்கள்.

இவர்கள் இருவரும் இளைஞர்கள். சுறுசுறுப்பான எம்.எல்.ஏ.,க்கள். நல்ல விஷயங்கள் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். இது அரசியலில் சகஜம்.

இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us