UPDATED : ஜூலை 07, 2024 12:00 AM
ADDED : ஜூலை 07, 2024 10:44 PM

'ஸ்டார்ட் அப்' தொடங்குவதை எளிமையாக்குதல், வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்குதல், வரி சலுகைகள் வழங்குதல் போன்றவற்றின் வாயிலாக, தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 2016ம் ஆண்டில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் துவக்கப்பட்டது.
புதிய வேலைவாய்ப்புகள், சந்தை வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கான முன் முயற்சியாவும் இத்திட்டம் கருதப்படுகிறது. இதுவரை, மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான தகுதிகள்:
* நிறுவனம் பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்* உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.* புதுமை, வளர்ச்சி, தயாரிப்புகளை மேம்படுத்துதல், சேவைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும். * அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.* ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் இருந்து பிரிந்த நிறுவனமாகவோ, ஏற்கெனவே உள்ள நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
பதிவு செய்யும் முறை:
* ஒரு நிறுவனத்தை பப்ளிக் லிட்., அல்லது பிரைவேட் லிட்., நிறுவனமாக பதிவு செய்ய வேண்டும்.* ஸ்டார்ட்-அப் இந்தியாவின் www.startupindia.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், நிறுவனத்தின் முழு தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.* வரிசலுகைகளைப்பெற உரிய அங்கீகாரம் பெற வேண்டும்.
'சீட் பண்ட்' திட்டம்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாடு, தயாரிப்பு, சந்தை வாய்ப்புகள் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிதி உதவியை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான தொகை ஒதுக்கப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தகுதிக்கேற்ப பணம் வழங்கப்படுவதை நிபுணர்கள் ஆலோசனைக் குழு தீர்மானிக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://seedfund.startupindia.gov.in என்ற இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.