sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாநாடு

சென்னையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாநாடு

சென்னையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாநாடு


UPDATED : ஆக 20, 2024 12:00 AM

ADDED : ஆக 20, 2024 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2024 12:00 AM ADDED : ஆக 20, 2024 11:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தைச் சேர்ந்த, ஸ்டார்ட் அப் எனும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இடையே இணைப்பு பாலத்தை ஏற்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, அரசு நிறுவனமான ஸ்டார்ட் அப் டி.என்., சென்னையில், 2025 பிப்ரவரியில் இரு நாட்களுக்கு, உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்த உள்ளது. இதன் வாயிலாக, தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகள், வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும்.

மேலும் நிறுவனங்கள் இடையே, தொழில் பரிமாற்றங்கள் நடக்கும். சென்னை நந்தனம் ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை அலுவலகத்தில், மாநாடு முன்னேற்பாடு குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று, ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதில், துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநாட்டில் நடத்த திட்டமிட்டு உள்ள நிகழ்ச்சிகள், உலகம் முழுதும் எந்தெந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தாண்டு ஜனவரியில் அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு இணையாக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்துமாறும், அதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை, அமைச்சர் அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us