தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான மின் உள்ளடக்க போட்டி; 5 பரிசுகள் வென்று 2 ஆசிரியர்கள் சாதனை

மாநில அளவிலான மின் உள்ளடக்க போட்டி; 5 பரிசுகள் வென்று 2 ஆசிரியர்கள் சாதனை

மாநில அளவிலான மின் உள்ளடக்க போட்டி; 5 பரிசுகள் வென்று 2 ஆசிரியர்கள் சாதனை


UPDATED : செப் 02, 2026 05:32 PM

ADDED : செப் 02, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 05:32 PM ADDED : செப் 02, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாநில அளவிலான மின் உள்ளடக்கப் போட்டியில், இரு ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய, கல்வி சார்ந்த படைப்புகள் 5 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் மற்றும் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஷாலினி ஆகியோர் இணைந்து, இந்த மின் உள்ளடக்கப் படைப்புகளை உருவாக்கினர்.

இவர்களின் அனைத்து காணொளி மற்றும் ஒலிப்பதிவு படைப்புகளும், பாடக்கருத்துகளை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

இவர்களின் படைப்பு, சமக்ர சிக் ஷா சார்பில் நடந்த, மாநில அளவிலான மின் உள்ளடக்கப் போட்டியில் 5 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிரியர் சசிக்குமார் காணொலி பிரிவில் அடிப்படை மற்றும் ஆயத்த நிலையில், முதல் இரண்டு இடங்களையும், ஒலிப்பதிவு பிரிவு அடிப்படை நிலையில் இரண்டாம் இடம் பிடித்து மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றுள்ளார்.

இதே போல், ஆசிரியர் ஷாலினி காணொலி பிரிவு தொடக்க நிலையில் முதலிடம், ஒலிப்பதிவு பிரிவு தொடக்க நிலையில் மூன்றாம் இடம் பிடித்து 30 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார்.

சாதனை படைத்த ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, துணை இயக்குநர் (பெண்கல்வி) மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பாராட்டி, தொடர்ந்து இதுபோன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள ஊக்கமளித்தனர். பள்ளி துணை முதல்வர், தலைமையாசிரியர், கல்வியாளர்கள், சக ஆசிரியர்கள் பாராட்டினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us