UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 08:30 AM
சென்னை:
லெட்ஸ் மேக் இன்ஜினியரிங் சிம்பிள் பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், கற்பித்தல் சார்ந்த பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரசு பள்ளிகளில், அறிவியல் பாடத்தை எளிதாக கற்கும் வகையில், ஸ்டெம் லேப் எனும் நவீன ஆய்வகத்தை அமைத்து வருகிறது.
இதன் வாயிலாக, அறிவியல் பாடத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, மனப்பாடம் செய்ய வைப்பதற்கு பதில், செயல்முறை விளக்கங்கள் வாயிலாக எளிதாக கற்பிக்கிறது. இந்த சோதனைக்கூடங்களில், டிஜிட்டல் வகை செயல்முறைகள், தொழில்நுட்ப விளக்கங்கள், செய்முறை விளக்கங்கள் அளிக்க தன்னார்வலர்கள் உள்ளனர்.
அந்த வகையில், சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஸ்டெம் லேப் ஆய்வகத்தை, ஆயிரம்விளக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலன் திறந்து வைத்தார்.
ஆய்கவத்தின் செயல்பாடுகள் குறித்து, எல்.எம்.இ.எஸ்., பவுண்டேஷன் நிறுவனர் பிரேமானந்த் விவரித்தார்.
நிகழ்வில், கிரண்ட்போஸ் நிறுவன தலைவர் உஷாராணி, முன்னாள் மாணவர் பேரவை உறுப்பினர்களான ஹரிபிரசாத், தீபு ஆன்டனி, பள்ளி தலைமையாசிரியர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.