UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 10:17 AM
கோவை:
கொடிசியா சாலையில் உள்ள, கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்டெம்' தொழில்நுட்ப பயிலரங்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை, அறிவியல் எளிய செய்முறைகள், 3டி மற்றும் கேட் மாடல், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அடிப்படை உள்ளிட்ட பயிற்சிகள், வல்லுநர்கள் வாயிலாக வழங்கப்படும்.
பயிற்சி கட்டணமாக, 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி முதல் வாரத்தில், ஞாயிறு மட்டும் என்ற அடிப்படையில் மூன்று மாதங்கள் நடைபெறும். ஜூன் 6ம் தேதிக்குள், ஆர்வமுள்ளவர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 0422-2963026 / 2963024 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, மண்டல அறிவியல் மையத்தின், மாவட்ட அறிவியல் அலுவலர்(பொறுப்பு) வள்ளி தெரிவித்தார்.