UPDATED : அக் 01, 2026 06:52 PM
ADDED : அக் 01, 2026 06:53 PM
கோவை:
பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா, கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்கொல்கத்தா டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குனர் டாக்டர் மாமென் சாண்டி பேசுகையில், “கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை விட, மனிதர்களின் வலியையும் வேதனையையும் போக்குவதே மருத்துவரின் லட்சியமாக இருக்க வேண்டும்.
மருத்துவத் துறையில் அரிய நோய்களைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு பெரிதும் கைகொடுக்கிறது. சிக்கலான மரபணு நோய்களைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை முறையை தேர்வு செய்ய ஏ.ஐ., உதவுகிறது என்பது உண்மைதான். தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது. ஏ.ஐ., பயன்பாட்டில் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களும், கட்டுப்பாடுகளும் அவசியம்,” என்றார்.
முன்னாள் மாணவர்களுக்கு விருது! முன்னாள் மாணவர்களான, டாக்டர்கள் முறையே மஞ்சு பிள்ளை, கோபால் சுப்பிரமணியம், சுதர்சனம், பெலிக்ஸ் ஜெபசிங் ஆகியோருக்கு, விழாவில் விருது வழங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குநர் சுதா ராமலிங்கம், முதல்வர் டாக்டர் சுப்பாராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
