தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திட்டக்குடி அரசு கல்லுாரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

திட்டக்குடி அரசு கல்லுாரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

திட்டக்குடி அரசு கல்லுாரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூன் 04, 2026 05:34 PM

ADDED : ஜூன் 04, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 05:34 PM ADDED : ஜூன் 04, 2026 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:
திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் துவங்கி, 18ம் தேதி வரை நடக்கிறது.

கல்லூரி முதல்வர் மணிகண்டன் செய்திக்குறிப்பு:


திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027ம் கல்வியாண்டு இணைய வழியில் விண்ணப்பித்த முதலாமாண்டு பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பாடப்பிரிவு மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு நாளை மாணவர் சேர்க்கை நடக்கிறது. பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை வரும் 8ம் தேதி துவங்கி, 18ம்தேதி வரை நடக்கிறது.

8 ம்தேதி காலை 9:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை அனைத்து கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கும், 10ம்தேதி பி.எஸ்.சி., கணிணி அறிவியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி., இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல் பாட பிரிவுகளுக்கும், 11ம் தேதி பி.காம்., மற்றும் பி.காம்., சி.ஏ., பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் பாட பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us