தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஜூன் 06, 2026 10:56 AM

ADDED : ஜூன் 06, 2026 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 10:56 AM ADDED : ஜூன் 06, 2026 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கை, துவங்கியது.

கல்லுாரி துணை முதல்வர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். முதல் நாளான நேற்று, இளநிலை சிறப்பு பிரிவு (விளையாட்டு, தேசிய மாணவர் படை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள்) மாணவியருக்கான கலந்தாய்வு, இரண்டாம் நாளான இன்றும் நடக்கிறது.

அதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 11 பேர், விளையாட்டு பிரிவில், 21 பேர், தேசிய மாணவர் படை பிரிவில், ஒருவர் என, மொத்தம், 33 மாணவியர் சேர்க்கை பெற்றனர்.

தொடர்ந்து, வரும், 8ல், 400 (தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து) முதல், 300 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள மாணவியருக்கும், 9ல், 299 முதல், 275 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவியருக்கும், 10ல், 274 முதல், 250 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவியருக்கும், அனைத்து நாட்களிலும் காலை, 09:00 மணிக்கு சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

மேலும், இளநிலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு, வரும், 11 காலை, 09:00 மணிக்கு, சிறப்பு தமிழ் பாடத்தில், 35 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பொதுத்தமிழ், ஆங்கில பாடங்களில், 100 முதல், 50 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

அதே போல், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமையில் நடந்த இளநிலை சிறப்பு பிரிவு கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 5, விளையாட்டு பிரிவில், 13, தேசிய மாணவர் படை பிரிவில், ஒன்று என, மொத்தம், 19 மாணவ, மாணவியர் சேர்க்கை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us