sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

/

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை


UPDATED : அக் 02, 2025 09:57 AM

ADDED : அக் 02, 2025 09:58 AM

Google News

UPDATED : அக் 02, 2025 09:57 AM ADDED : அக் 02, 2025 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
அரசு மருத்துவக் கல்லுாரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை உயர்த்திட சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு;


ம த்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் 2026-27 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 550 மருத்துவ இடங்களை அதிகரித்து தரவும், புதிதாக மாநில மற்றும் மத்திய அரசால் துவங்கப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 5, 550 மருத்துவ இடங்களை உருவாக்க மத்தி ய அரசு முடிவு எடுத்துள்ளது.

அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் 6,000 இடங்களை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்கட்டமைப்பு வசதியும், போதிய பேராசிரியர்களும் உள்ளனர்.

ஆகையால், வரும் 2026-27 கல்வியாண்டில், பிரதமரின் மருத்துவ படிப்பில் புதிய திட்டத்தின்படி, அரசு மருத்துவ கல்லுாரியின் இடங்களை 180ல் இருந்து 250 ஆக உயர்த்த சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் உரிய முயற்சிகள் எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us