தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மணலில் முதலை சிற்பம் செய்த மாணவருக்கு பரிசு

மணலில் முதலை சிற்பம் செய்த மாணவருக்கு பரிசு

மணலில் முதலை சிற்பம் செய்த மாணவருக்கு பரிசு


UPDATED : அக் 20, 2026 12:50 PM

ADDED : அக் 20, 2026 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:50 PM ADDED : அக் 20, 2026 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்:
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில், புதுப்பாளையம் மாணவர் முதலிடம் வென்றார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளி மற்றும் வட்டார அளவில், கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த இப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

வட்டார அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி, மலுமிச்சம்பட்டி, எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

இதில் புதுப்பாளையம் நடுநிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் ரவீன், முதலையை மணலில் உருவாக்கி காட்சிப்படுத்தினார்.

இவர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

மாணவருக்கு, வட்டார கல்வி அலுவலர் இருதய மரிய ஜோசப், தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us