தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் பிறந்த நாள் கொண்டாட்டம் போதை மாத்திரைகளுடன் கைது

மாணவர் பிறந்த நாள் கொண்டாட்டம் போதை மாத்திரைகளுடன் கைது

மாணவர் பிறந்த நாள் கொண்டாட்டம் போதை மாத்திரைகளுடன் கைது


UPDATED : மே 30, 2024 12:00 AM

ADDED : மே 30, 2024 09:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2024 12:00 AM ADDED : மே 30, 2024 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடக்கு கடற்கரை:
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வடக்கு கடற்கரை, ராஜாஜி சாலை, இந்தியன் வங்கி அருகே, வடக்கு கடற்கரை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரசன்னா மற்றும் பிரபுவை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பிரசன்னா பிறந்த நாளை கொண்டாட, தன் நண்பர் பிரபுவுடன் இ.சி.ஆர்., சென்றதும், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த திருநங்கை அலேக்கா என்பவரிடம் 4,500 ரூபாய்க்கு கஞ்சா பொட்டலம், எண்ணுார், சுனாமி குடியிருப்பை சேர்ந்த சஞ்சய், 23 என்பவரிடம் 1,200 ரூபாய்க்கு போதை மாத்திரைகள் வாங்கியதும் தெரியவந்தது.

திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர், பிரசன்னா, 19. தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., படிக்கிறார். அவரது நண்பர் திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபு, 22. மூவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான கஞ்சா வியாபாரி திருநங்கை அலேக்காவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us