UPDATED : ஜூன் 22, 2024 12:00 AM
ADDED : ஜூன் 22, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
முதலியார்பேட்டை அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளி மாணவின் தலையில் சிமென்ட் காரை விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை உப்பளம் சாலையில் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளி உள்ளது. பள்ளியில் பயிலும் 12 வயது மாணவிக்கு நேற்று பள்ளி கட்டடத்தில் இருந்து சிமென்ட் காரை தலையில் விழந்தது. காயமடைந்த அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
மாணவி தலையில் சிமென்ட் காரை விழுந்தது குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.