பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்
பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்
UPDATED : செப் 16, 2024 12:00 AM
ADDED : செப் 16, 2024 08:52 AM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவர், புகையிலை பொருள் பயன்படுத்தியுள்ளார். இதை கண்ட பள்ளி ஆசிரியர், அந்த மாணவனை கண்டித்தார். ஆனால் அந்த மாணவன் மீண்டும் அதே தவறை செய்துள்ளார்.
இதனால், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டு, அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, மாணவன் புகையிலை பொருள் பயன்படுத்துவது பற்றி தெரிவித்தனர்.
இதை கண்ட மாணவன், பெற்றோருக்கு பயந்து பள்ளி தலைமை ஆசிரியர் அறை கட்டடத்தின் மீது ஏற முயற்சித்தார். அப்போது, தவறி விழுந்ததில் கையில் அடிபட்டது. காயமடைந்த மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அதன்பின், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.