100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் பட்டம் விடும் நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் பட்டம் விடும் நிகழ்ச்சி
UPDATED : ஏப் 22, 2026 02:17 PM
ADDED : ஏப் 22, 2026 02:19 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாலை, சட்டசபை தேர்தலையொட்டி 'தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா' என்ற தலைப்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 250 மாணவ மாணவியர் பட்டம் பறக்க விடுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது, 100 சதவீதம் ஓட்டளிப்பது 'வாக்களிப்போம் உறுதியாக நம் நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக' வாசகம் அடங்கி பட்டங்களை பறக்க விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், ஓசூர் குடிசாதனப்பள்ளியை சேர்ந்த குருமூர்த்தி எல்லம்மா கோலாட்ட குழு மாணவியர், கோலாட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது இடது ஆள்காட்டி விரலில் மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் மட்டுமில்லாது உங்கள் உறவினர்கள், நண்பர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்று ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தேர்தல் ஊடக மைய பொறுப்பு அலுவலர் மோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜமுருகன், தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, சித்ராதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
