UPDATED : அக் 12, 2024 12:00 AM
ADDED : அக் 12, 2024 10:32 AM
சென்னை:
திருத்தணி, பொன்பாடியைச் சேர்ந்தவர் சுந்தர், 19. சென்னை மாநிலக் கல்லுாரியில், அரசியல் அறிவியல் முதலாமாண்டு படித்தார். கடந்த 4ம் தேதி மாலை, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே இவரை, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலர் சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுந்தர், நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொலை வழக்கில் தொடர்புடைய, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், ஐந்து பேரை, ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், 20, என்பவரை, பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான ஹரிபிரசாத், கமலேஷ்வரன், யுவராஜ், ஆல்பர்ட் ஆகியோர் மீதான கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இந்நிலையில் இதில் தொடர்புள்ள 5 பேரையும், பச்சையப்பன் கல்லுாரி நிர்வாகம் நேற்று நீக்கியது.