sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


UPDATED : மார் 13, 2026 01:45 PM

ADDED : மார் 13, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 01:45 PM ADDED : மார் 13, 2026 01:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வானுார்:
வானுார் வட்டார வள மையத்தில் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வானுார் ஒன்றிய தொடக்கக் கல்வித் துறை சார்பில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் நினைவு தினம் மற்றும் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.

இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா வானுார் வட்டார வள மையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் உஷா முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, கவிதா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர் இயற்கை மருத்துவர் சுரேஷ், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, அருள், முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் லட்சுமிரேகா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us