தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி முறையில் சீர்திருத்தம் கேட்டு பிரான்சில் மாணவர் போராட்டம்

கல்வி முறையில் சீர்திருத்தம் கேட்டு பிரான்சில் மாணவர் போராட்டம்

கல்வி முறையில் சீர்திருத்தம் கேட்டு பிரான்சில் மாணவர் போராட்டம்


UPDATED : அக் 05, 2026 01:58 PM

ADDED : அக் 05, 2026 01:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 01:58 PM ADDED : அக் 05, 2026 01:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரிஸ்:
நாட்டின் கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யக் கோரி, பிரான்ஸ் முழுதும், ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் வகுப்பறையில் இட நெருக்கடி, மோசமான நிலையில் உள்ள கல்வி கூடங்கள், சமமற்ற கல்வி முறை, தெளிவற்ற பல்கலை மாணவர் சேர்க்கை, பணியாளர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் அளவில் தொடங்கிய இப்போராட்டம், நாடு முழுதும் பரவி பெரும் போராட்டமாக மாறியுள்ளது.

இப்போராட்டத்தால் பிரான்ஸ் முழுதும் நுாற்றுக்கணக்கான உயர்நிலை பள்ளிகள் முடக்கப்பட்டன. போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும், போலீசாருடன் மோதலாகவும் மாறியது.

போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். பொது அமைதியை சீர்குலைத்ததாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்தத் தொடர் போராட்டத்தால், நுாற்றுக்கணக்கான கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, அமைச்சரவையின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us