தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர் ஸ்காலர்ஷிப்: வங்கி கணக்கு அவசியம்

மாணவர் ஸ்காலர்ஷிப்: வங்கி கணக்கு அவசியம்

மாணவர் ஸ்காலர்ஷிப்: வங்கி கணக்கு அவசியம்


UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM

ADDED : ஜூன் 05, 2024 10:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM ADDED : ஜூன் 05, 2024 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாணவர் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும் என பள்ளிக்கல்வி துறை நிபந்தனை விதித்து உள்ளது.
அனைத்து வகை பள்ளி மாணவர்களும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம் என, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
அதன் விபரம்:
இடைநிற்றல் இன்றி ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்க ஏதுவாக, கல்வி உதவித்தொகை, ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, வங்கிக் கணக்கு கட்டாயம் துவங்க வேண்டும்.
நேரடி பயனாளர் பரிமாற்ற முறையில், அந்த வங்கிக் கணக்கின் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு முறையை பின்பற்றி, மாணவர்களுக்கான வங்கிக் கணக்கை துவங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us