தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெடிகுண்டு மிரட்டல் மாணவி பிடிபட்டார்

வெடிகுண்டு மிரட்டல் மாணவி பிடிபட்டார்

வெடிகுண்டு மிரட்டல் மாணவி பிடிபட்டார்


UPDATED : அக் 26, 2026 06:45 PM

ADDED : அக் 26, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:45 PM ADDED : அக் 26, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி லோதி சாலை, 'ஏர்போர்ஸ் பால பாரதி' பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 23ம் தேதி இ - மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது.

போலீஸ் நடத்திய சோதனையில் புரளி என உறுதி செய்யப்படது. இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர்.

அதே பள்ளியில் படிக்கும், 15 வயது மாணவி இந்த இ - மெயில் அனுப்பியதை கண்டுபிடித்தனர்.

அந்தச் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக இ - மெயில் அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார்.

சிறுவர் நீதி சட்ட பிரிவுகளின் கீழ், அந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us