தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்

தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்

தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்


UPDATED : ஏப் 03, 2026 06:22 PM

ADDED : ஏப் 03, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2026 06:22 PM ADDED : ஏப் 03, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை:
பாளையம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து ஆறுதல் கூறினர்.

பாளையம் எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மதன்பாபு 15. குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை 08:00 மணிக்கு இறந்தார்.

இதை அறிந்த மதன்பாபு, குடும்பத்தினர் கதறி அழுதனர். நேற்று காலை மதன்பாபுவுக்கு, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வை எழுத உறவினர்களிடம் கூறி உள்ளார். உறவினர்கள் மாணவனை பள்ளிக்கு அழைத்து சென்று தேர்வை எழுத வைத்தனர்.

இதனிடையே ஆறுமுகத்தின் உடல் திருச்சியில் இருந்து எஸ்.புதுாருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று மாலை 04:00 மணிக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்றார். படிப்பின் முக்கியத்துவம் கருதி தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவனை பொதுமக்கள் பாராட்டி ஆறுதல் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us