sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் உடன் மாணவர்கள் , பெற்றோர்கள்: பல்லாண்டு பந்தம்

/

தினமலர் உடன் மாணவர்கள் , பெற்றோர்கள்: பல்லாண்டு பந்தம்

தினமலர் உடன் மாணவர்கள் , பெற்றோர்கள்: பல்லாண்டு பந்தம்

தினமலர் உடன் மாணவர்கள் , பெற்றோர்கள்: பல்லாண்டு பந்தம்


UPDATED : மே 19, 2025 12:00 AM

ADDED : மே 19, 2025 02:35 PM

Google News

UPDATED : மே 19, 2025 12:00 AM ADDED : மே 19, 2025 02:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் 1951ல் துவக்கப்பட்டதிலிருந்தே மாணவர்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை ஆணித்தரமாக நம்புகிறது. மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதுதான், இந்த சமுதாயத்துக்கும் நாம் செய்யும் முக்கிய கடமை. அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என்று கருதாமல், ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து பங்களிக்க வேண்டும். இது பத்திரிகைகளுக்கும் பொருந்தும். 74 ஆண்டுகளுக்குமுன் துவங்கப்பட்ட தினமலர் நாளிதழ், 60 ஆண்டுகளாக மாணவச் சமூகத்துக்கு தன்னிகற்ற சேவையாற்றி வருகிறது.

சிறுவர் மலர்


கடந்த 1984 முதல் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக 32 பக்க சிறுவர் மலர் புத்தகம், வாரம் ஒருமுறை தினமலர் நாளிதழ் வெளியிடத் துவங்கியது. இது இந்தியாவில் வேறு எந்த பத்திரிக்கையும் இதுவரை வெளியிடாத ஒன்று.

ஜெயித்துக்காட்டுவோம்


கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது கடுமையான ஒன்று. அவர்களின் அச்சம் போக்கி தன்னம்பிக்கையூட்டும் விதமாக 1994ல் தினமலர் சார்பில் நடத்தத் துவங்கப்பட்டதுதான் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி.

எளிமையாக புரிந்து படித்தல், தேர்வில் வினாக்களை எளிதாக எதிர்கொள்ளுதல், அதிகபட்ச மதிப்பெண் பெறுதல் தொடர்பான ஆலோசனைகளை கல்வியாளர்கள், அனுபவமிக்க ஆசிரியர்கள் வழங்குவர். இந்நிகழ்ச்சி மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றதால் மாநிலம் முழுவதும் ஒரெ ஆண்டில் 125 இடங்களுக்குமேல் நடத்தப்பட்டன. அப்போது 10ம் வகுப்பு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது.

இத்துடன் பிளஸ் 2 கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கெனவும் தனித்தனியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்.,2ல் துவங்கி டிசம்பருக்குள் முடியும்.

ஜெயித்துக்காட்டுவோம் வாயிலாக, கடந்த 31 ஆண்டுகளில் பல லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அன்று சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, மாநகராட்சி மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை நடத்தக் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தினமலர் நாளிதழ் சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நடத்தப்படுகிறது.

கடந்த 2012 டிச., 5ம் தேதி சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நேரடியாக பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

லட்சிய ஆசிரியர் விருது


கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து, தினமலர் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

பட்டம்


இது பள்ளி மாணவர்களுக்காக தினமலர் வெளியிடும் பிரத்யேக இணைப்பு. டேப்ளாய்டு வடிவ 12 பக்கம் கொண்ட இந்த இணைப்பு, வாரத்தில் 5 நாட்கள், ஆண்டில் 180 நாட்கள் பள்ளிகளில் மட்டும் வினியோகிக்கப்படுகிறது. தினமலர் நாளிதழில் திங்கள்தோறும் ஒரு பக்க அளவில் வெளியாகிறது. க்ரைம், சினிமா, அரசியல் தவிர்த்து மாணவர்களின் கல்வி, பொது அறிவு மேம்பாட்டுக்குரிய விஷயங்களை மட்டும் தாங்கி வரும் இவ்விதழை அனுபவம் வாய்ந்த தினமலர் ஆசிரியர் குழு தயாரிக்கிறது.

வினாடி-வினா



தமிழகத்தில் பட்டம் இதழ் வாங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஒருங்கிணைத்து அங்கு பயிலும் மாணவ மாணவியருக்கு, பட்டம் வினாடி-வினா போட்டி ஆண்டுதோறும் தினமலர் சார்பில் நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவோர் நாசா விண்வெளி மையத்தை பார்க்க அழைத்துச் செல்லப்படுவர். கடந்த 5 ஆண்டுகளில் இப்போட்டியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். வெற்றி பெற்றவர்களில் பலர் சாதனையாளர்களாக திகழ்வது பெருமைக்குரிய விஷயம்.

வித்யாரம்பம்



கல்விக் கடவுளான சரஸ்வதியை வணங்கும் நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். இந்நாளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் கலைகளை கற்பிக்கத் துவங்குவர். தினமலர் சார்பில் குழந்தைகளுக்கு எழுத்து கற்பித்துத் தரும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2.5 வயது முதல் 3.5 வயது குழந்தைகளுக்கு பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து அகரம் எழுத பழக்குகின்றனர். இந்நிகழ்ச்சி பெற்றோரின் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுருக்கிறது.

நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,


மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவை நனவாக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மைய நடத்துனர்கள், பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்று தேர்வு முறைகள், நேர்முகத் தேர்வு நடக்கும் விதம் குறித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவிருப்போருக்கு நேரடியாக விளக்குகின்றனர். இந்நிகழ்ச்சி அரங்கு நிறைந்த காட்சியாக அமைவது, தினமலர் மீது மாணவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று.

வழிகாட்டி நிகழ்ச்சி


பிளஸ் 2க்குப் பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், வேலைவாய்ப்புகள் என்னென்ன என்று மாணவர்களுக்கு விளக்குகிறது இந்த நிகழ்ச்சி. இன்ஜி., மருத்துவம் மட்டுமின்றி பிற படிப்புகளின் விவரங்கள், வேலை வாய்ப்புகள், உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து கல்வியாளர்கள் ஆலோசனை, விளக்கங்கள் அளிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us