UPDATED : அக் 20, 2026 12:58 PM
ADDED : அக் 20, 2026 12:59 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:
கூடலுார் ஒக்கலிகர் மகாஜன சங்கம் சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தலைவர் ராம்பா தலைமை வகித்தார். செயலாளர் அருண்குமார், பொருளாளர் சரவணன், ஓய்வு பெற்ற என்.எஸ்.கே.பி. பள்ளி தலைமை ஆசிரியர்கள் கதிரேசன், ராமராஜ் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு நினைவு பரிசு, ரொக்க பணம் வழங்கப்பட்டது. மாணவர்களை பாராட்டி ஆலோசனையும், வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
