UPDATED : ஆக 04, 2025 12:00 AM
ADDED : ஆக 04, 2025 03:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
அரசு பள்ளி மாணவர்களை அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாக பயன்படுத்தக் கூடாது, என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கர்நாடகா பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வெளியே நடக்கும் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாக ஈடுபடுத்த கூடாது.
பள்ளி நேரங்களில் காணொளி மாநாடுகள் நடத்தக்கூடாது. பள்ளி வேலை நாட்களில் அரசு, தனியார் தேர்வுகள் நடத்தக்கூடாது. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே தேர்வு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை மீறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.