UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 11:14 AM

கோவை:
கூடுதல் திறன்களை வளர்த்துக் கொண்டால் பொறியியல் துறையில் மாணவர்கள் சாதிக்கலாம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு பேசினார்.இதுகுறித்து, அவர் பேசியதாவது:
மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், நல்ல மதிப்பெண் சதவீதத்தைப் பெற வேண்டும். கூடுதலாக டெக்னிக்கல், கம்யூனிகேஷன், நெட்வொர்க்கிங் குறித்த திறன்களை வளர்த்துக் கொண்டால், நல்ல எதிர்காலம் உள்ளது. மாறிவரும் தேவைகளுக்கேற்ப கணினி திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வேலை என்பது குறைந்தகால இலக்கு.ஆனால், கெரியர் என்பது உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிப்பது. எனவே, எந்தப் படிப்பை படிக்க வேண்டும் என நீங்கள் தீர்மானிப்பது முக்கியம்.சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட், ஏரோனடிக்கல், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஹெச்.சி.எல்., டெக் மஹிந்திரா, பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போது மாணவர்கள் ஆய்வக வசதி, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், முன்னாள் மாணவர்கள் எந்த துறைகளில் எல்லாம் உள்ளனர், விருது பெற்றவர்கள் ஆகியன குறித்து தெரிந்துகொண்டு தேர்வு செய்ய வேண்டும்.பெற்றோர்கள், மாணவர்களுக்குத் தேவையான, அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள உதவுங்கள். ஆனால், எந்த துறை தேர்ந்தெடுப்பது என்ற முடிவை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.