sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியர்களால் உயிரிழப்பை தடுக்க முடியும்

மாணவ, மாணவியர்களால் உயிரிழப்பை தடுக்க முடியும்

மாணவ, மாணவியர்களால் உயிரிழப்பை தடுக்க முடியும்


UPDATED : ஜன 29, 2026 09:26 AM

ADDED : ஜன 29, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2026 09:26 AM ADDED : ஜன 29, 2026 09:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்:
“சாலை விபத்துகளில், ஏற்படும் உயிரிழப்பு களை மாணவ, மாணவியர்களால் தடுக்க முடியும்,” என, கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசினார்.

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய

பேரணியை, தொடங்கி வைத்த கரூர், தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் கடந்த, 2024ம் ஆண்டை விட, 2025ல் அதிகளவில் சாலை விபத்துகளில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற பலர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், டூவீலரில் செல்கிறவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும், வீடுகளில் இருந்து டூவீலரில் செல்கிறவர்களிடம், ஹெல்மெட் அணியும்படி மாணவ, மாணவியர் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை, மாணவ, மாணவியர்களால் தடுக்க முடியும். இவ்வாறு பேசினார்.

மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, யங் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us