கரூர் அஞ்சல் கோட்டத்தில் மாணவர்கள் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கலாம்
கரூர் அஞ்சல் கோட்டத்தில் மாணவர்கள் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கலாம்
UPDATED : செப் 26, 2026 01:37 PM
ADDED : செப் 26, 2026 01:39 PM
கரூர்:
கரூர் அஞ்சல் கோட்டத்தில், மாணவர்கள், பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பித்து கொள்ள ஆதார் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் அஞ்சல் கோட்டத்தில், 33 ஆதார் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. அதில், காலாண்டு பள்ளி தொடர் விடுமுறையையொட்டி, மாணவர்கள் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பித்து கொள்ளலாம்.
இந்த சேவை கரூர் மற்றும் குளித்தலை தலைமை தபால் நிலையங்களில் காலை, 08:00 மணி முதல், இரவு, 08:00 மணி வரை ஞாயிறு உள்பட, அனைத்து நாட் களிலும் செயல்படுகிறது. ஐந்து மற்றும் 15 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை.
பள்ளி, கல்லுாரிகளில் ஆதார் முகாம் நடத்த அஞ்சல் ஆய்வாளர் மனோஜ் என்பவரை, 70101 - 48941 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொது மக்கள் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு, அஞ்சலக சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
