UPDATED : பிப் 11, 2026 04:46 PM
ADDED : பிப் 11, 2026 04:47 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:
ஈரோடு மாவட்டம், பவானி, ஆப்பக்கூடல், குமரகுரு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை படிக்கும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தில், பெரியநாயக்கன்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் வேளாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்தனர்.
இவர்கள், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குட்பட்ட சின்னதடாகம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், கூடலூர், நாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் தலா, 13 விவசாயிகளிடம் பயிர்கள், பயிரிடும் முறைகள், பயிர் மேலாண்மை, நீர் பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை, வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர்.
